அமெரிக்காவில் பள்ளிவாசல் மீது மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது!

0

அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள எஸ்கொண்திதோ எனும் பகுதியில் இஸ்லாமிய மைய்யத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் மீது நேற்று (24.3.2019) நள்ளிரவில் (அமெரிக்க நேரப்படி 3.15) சில மர்ம நபர்களால் தீ வைக்கபட்டு பெரும் பாதிப்புகளை உண்டாக்க முயற்சி மேற்கொள்ளபட்டுள்ளது. இதில் அதிர்ஷடவசமாக யாருக்கும் பெரும் சேதங்கள் ஏறப்படவில்லை. ஏழு நபர்கள் மட்டும் தீ காயத்தோடு மருத்தவமனைக்கு அழைத்து செல்லபட்டுள்ளனர்.

எஸ்கொண்திதோ பள்ளிவாசல் அங்குள்ள சில முஸ்லிம்களால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. இந்த பள்ளிவாசல் மூலம் பல நூறு முஸ்லிம்கள் மற்றும் அமெரிக்கர்கள் பலனடைந்து வந்துள்ளனர். ஐவேளை தொழுகை, ரமலான் மாதங்களில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, இஸ்லாமிய சொற்பொழிவுகள் என்று இந்த பள்ளிவாசல் செயல்பட்டு வருகிறது. இந்த தீ வைப்பு சம்பவம் நடைபெற்றவுடன் தீ எரியும் வாடையை உணர்ந்து அருகே இருந்த முஸ்லிம்கள் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்த தீ அணைப்பு சாதனங்களை பயன்படுத்தி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். பிறகு தீயணைப்பு அறைக்கு அழைப்பு கொடுத்ததன் பெயரில் தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்து அங்கிருந்தவர்களுக்கு முதலுதவி செய்தனர்.

இந்த தீ வியப்பு சம்வம் நடைப்பெற்ற பள்ளிவாசலுக்கு சொந்தமான வாகனம் நிறுத்துமிடத்தில் காவல்துறையால் ஒரு துண்டு காகிதம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க உள்ளூர் ஊடகம் தெரிவிக்கின்றனர். அந்த கடிதத்தில் நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அதில் எழுதப்படிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கபடுகின்றது.

இந்த தாக்குதல் குறிதது பேசிய அமெரிக்க-இஸ்லாமிய தொடர்பு மையத்தின் தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில் தீ வைப்பு சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அதனை காவல்துறையிடம் கூற முன்வர வேண்டும் என்றும், உண்மையான குற்றவாளிகளை காவல்துறை விரைந்து கண்டுபிடிக்கும் என்றும் கூறினார். மேலும் இந்த தீ வைப்பு சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது என்றும் கூறினார். மேலும் இஸ்லாமிய மையத்தின் நிர்வாக உறுப்பினர் யூசுப் மில்லர் கூறுகையில் “இஸ்லாமிய வெறுப்பின் விளைவாக நடைபெற்ற நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கி சூடு சம்பவத்தோடு இந்த சம்பவமும் தொடர்பு படுத்தபட்டுள்ளது எங்களுக்கு அச்சத்தை தருகிறது. இந்த சம்பவம் அமெரிக்க முஸ்லிம்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தில் நடைபெற்ற அந்த இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கை மற்ற பகுதியிலும் பரவுவது அச்சமளிகிறது. அவர்கள் நினைக்கும்படி இந்த பள்ளிவாசலில் ஒருபோதும் நாங்கள் தொழுவதையோ, ஒன்று கூடுவதையோ நிருத்தபோவதில்லை என்றார்.

இந்த சம்பவத்தை உள்ளூர் காவல்துறையோடு, FBI எனும் சிறப்பு புலனாய்வு அமைப்பும் சேர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த தீவைப்பிற்கு சாதாரண எரிப்பொருள் பயன்படுத்தப்படவில்லை, வேறுமாதரியான வேதியல் திரவம் பயன்படுத்தபட்டுள்ளது என்று முதல் கட்டமாக காவல்துறை தெரிகிறது. மேலும் இந்த வழக்கு வெறுப்பின் அடிப்படையில் நடைபெற்ற தீ வைப்பு சம்பவம் என்ற கோணத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

Comments are closed.