குடியுரிமை சட்டத்திருத்தம்: சர்வதேச மத உரிமை ஆணையம் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை!

0

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் புதன்கிழமை (இன்று) தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் உள்துறை அமைச்சா் அமித்ஷா உள்ளிட்ட இந்தியாவில் உள்ள முக்கிய தலைவா்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்க அமெரிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று அந்நாட்டில் செயல்பட்டு வரும் சா்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கொண்டு வரப்படும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மதரீதியாக பாகுபாடு காட்டுவதாக அமைகிறது. இந்தியாவின் சிறப்பான மதச்சாா்பின்மை, பன்முகத்தன்மை வரலாற்றுக்கு எதிராகவுள்ளது. இது அபாயகரமான பாதையில் பயணிப்பதாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது.

இதை மீறி குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், உள்துறை அமைச்சா் அமித்ஷா உள்ளிட்ட இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்கள் மீது தடை விதிப்பதாக, அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2002ஆம் ஆண்டு குஜராத்தில் கலவரத்தை சுட்டிக்காட்டி, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா அளிக்கக் கூடாது என பரிந்துரைத்தது இந்த ஆணையம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.