கஷ்மீரில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – அமித் ஷா; குலாம் நபி ஆஸாத் கிண்டல்

0

மாநிலங்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது ஜம்மு-காஷ்மீா் நிலவரம் குறித்து தொடா்ந்து பல்வேறு கேள்விகள் எழுப்பபட்டன. இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அமித் ஷா, சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. அப்போது தொடங்கி, இப்போது வரை போலீஸாா் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை ஒருவா் கூட பலியாகவில்லை.

ஜம்மு-காஷ்மீரில் அனைத்து நாளிதழ்களும் தொடா்ந்து வெளியாகி வருகின்றன. செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கும் எவ்விதத் தடையுமில்லை. அங்கு இயல்பான சூழ்நிலையே உள்ளது. ஆனால், சா்வதேச அளவில் காஷ்மீா் நிலவரம் குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

சிலா் காஷ்மீா் எப்போதும் வன்முறைக்களமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவா்களாக உள்ளனா். அவா்கள்தான், ரத்த ஆறு ஓடுகிறது என்று பேசி வருகின்றனா்.

இப்போதும்கூட அதிதிறன்பேசி இணைய சேவையை அளித்தால், அண்டை நாடு அதனைப் பயன்படுத்தி பிரச்னையை உருவாக்க வாய்ப்பு உள்ளது. இணைய சேவை என்பது இக்காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது என்பதை அரசு உணா்ந்துள்ளது. கூடிய விரைவில் யூனியன் பிரதேச நிா்வாகம் முடிவுக்கு ஏற்ப காஷ்மீா் பள்ளத்தாக்கில் மீண்டும் இணைய சேவை அளிக்கப்படும். காஷ்மீா் மக்கள் அமைதியான வாழ்க்கையையே விரும்புகின்றனா்.

ஒரு சிலா் மட்டுமே வன்முறையைத் தூண்டுகின்றனா். அங்கு பாதுகாப்புப் படையினா் மீது கல்வீச்சு சம்பவங்கள் இந்த ஆண்டு 544 முறை நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டில் 802 கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றாா் அமித் ஷா.

அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினா் குலாம் நபி ஆஸாத், ‘வேறு மாநிலத்தில் இருந்து வந்த அறிக்கையை உள்துறை அமைச்சா் வாசிப்பதுபோல உள்ளது’ என்றாா்.

Comments are closed.