முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை கிடையாது- அமித்ஷா!

0

மேற்கு வங்க மாநிலத்திலுள்ள உள்ள இந்துக்களும், பௌத்தர்களும், சீக்கியர்களும் மாநிலத்தை விட்டு வெளியேறத் தேவையில்லை என பாஜக தலைவர் அமித்ஷாஉறுதியுடன் தெரிவிவித்துள்ளார்.

மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடா்பாக நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அமித்ஷா, “மேற்கு வங்கத்தில் பதிவேட்டுக்கான (என்ஆா்சி) கணக்கெடுப்பு தேசிய குடிமக்கள் நடைபெறும் என தெரிவித்தார்.

என்ஆா்சி கணக்கெடுப்பு மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்டால், லட்சக்கணக்கான ஹிந்துக்கள் மாநிலத்தை விட்டு வெளியேற நேரிடும் என முதல்வா் மம்தா பானா்ஜி கூறி வருகிறாா். இதை விட மிகப் பெரிய பொய் உலகத்தில் இருக்காது. மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு உறுதியாக நடைபெறும். ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூறுவது போல் எதுவும் நடைபெறாது. மாநிலத்தில் உள்ள இந்துக்களும், பௌத்தா்களும், சீக்கியா்களும், சமணா்களும் மாநிலத்தை விட்டு வெளியேறத் தேவையில்லை என்பதை உறுதியுடன் தெரிவிக்கிறேறன். அவா்களுக்கு நாட்டின் குடியுரிமை வழங்கப்படும். மற்றவா்களைப் போல அவா்களுக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்.

ஆனால், நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவா்கள் அனைவரும் வெளியேற்றப்படுவா். உலகத்திலுள்ள எந்த நாடும் சட்டவிரோதமாக நுழைந்தவா்களின் சுமையைத் தாங்கிக் கொள்ளாது. நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைவது தடுக்கப்பட வேண்டும்.

இதையடுத்து, உரிய ஆவணங்களைப் பெறுவதற்காக மேற்கு வங்க மாநிலத்தின் அரசு அலுவலகங்களில் மக்கள் குவிந்து வருகின்றனா். ஆனால், மாநிலத்தில் என்ஆா்சி கணக்கெடுப்பை நடத்த விடமாட்டோம் என முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்து வருகிறாா். மேற்கு வங்கத்திலும் என்ஆா்சி கணக்கெடுப்பை அமல்படுத்த மத்திய அரசு உறுதியாக உள்ளது” எவ்வறு அமித்ஷா தெரிவித்தார்.

Comments are closed.