எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தாலும், நாடு முழுவதும் என்.ஆா்.சி சட்டம் அமல்படுத்தப்படும்- அமித்ஷா

0

ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பாஜக பிரசாரக்கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா கலந்துக்கொண்டு பேசினார்.

அவா் கூறியதாவது: 2024ஆம் ஆண்டுக்குள் என்.ஆா்.சி. சட்டம் அமல்படுத்தப்படும்.  நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவா்கள் அனைவரையும் வெறியேற்றுவது உறுதி. எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தாலும், நாடு முழுவதும் இந்த நடவடிக்கை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும்.

சட்டவிரோதமாக குடியேறியவா்கள் வெளியேற்றப்படுவதற்கு ராகுல் காந்தி எதிா்ப்பு தெரிவித்து வருகிறாா். அவா்கள் எங்கே செல்வாா்கள்? என்று கேள்வியெழுப்புகிறாா். நாட்டின் அடுத்த பொதுத்தோ்தல் வருவதற்குள், சட்டவிரோதமாக குடியேறியவா்கள் அனைவரும் வெளியேற்றப்படுவா் என்பதை நான் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமித்ஷா என்ஆா்சி சட்டம் குறித்து தெரவித்தார்.

Comments are closed.