சரிந்தது இந்திய பொருளாதாரம்: உயர்ந்தது அமித்ஷா மகனின் நிறுவனம்!

0

நாட்டின் பொருளாதாரம் இதுவரை கண்டிடாத அளவுக்கு வீழ்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டுள்ளது. இதற்கு பாஜகவின் பொருளாதார கொள்கைகளே காரணம் என பல பொருளாதார நிபுணர்கள் தெரித்தனர். மேலும் வீழ்ச்சிலிருந்து மீள்வதற்கான வழிகளையும் நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால் பாஜக அரசு பொருளாதாரம் வீழ்ச்சியடையாததுபோல் செயல்பட்டு வருகிறது.

பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பல தொழில்துறைகள் லாபம் பெற முடியாமல் மூடிவிட்டன. ஆனால் பாஜக ஆட்சியாளர்களின் நிறுவனங்கள் மட்டும் எந்தவொரு பாதிப்பையும் சந்திக்காமல் லாபத்தில் இயங்கி வருகிறது.

இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம் சந்தை மதிப்பு ரூ. 9 லட்சம் கோடி ரூபாய் வருவாய் எட்டியுள்ளது. அதன் மூலம் இந்தியப் பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி 3 லட்சத்து 80 ஆயிரத்து 700 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

அந்த வரிசையில், பாஜக தலைவர் அமித்ஷா மகன் ஜெய் ஷாவும் உள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில் ஜெயின் “குசும் ஃபின்சர்வ்” நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் இருந்துள்ளது.

தற்போது, குசும் ஃபின்சர்வ் நிறுவனம் தெரிவித்த அறிக்கையின் படி, 2013-14 நிதியாண்டில் வெறும் 79.6 லட்சம் ரூபாயாக இருந்த வருவாய் 2018-19ல் ரூ.119.61 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் மொத்த நிகர மதிப்பு 2015ல் 1.21 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2019-ல் 25.83 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

பணம், முதலீடு உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தும் சொத்து 2015ல் 37.80 லட்ச ரூபாயாக இருந்தது. 2019ல் 33.43 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ள கூழலில், அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் நிறுவனம் மட்டும் எப்படி உயர்ந்தது என கேள்வி எழுந்துள்ளது.

Comments are closed.