அண்ணா அறிவாலயத்திற்கு ஹிந்தி மொழியில் வெடிகுண்டு மிரட்டல்!

0

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ளது. இதே வளாகத்தில் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகமும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு (நவம்பர் 28) சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த மர்ம நபர், அண்ணா அறிவாலயத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கபோவதாக ஹிந்தி மொழியில் பேசிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

மிரட்டலை அடுத்து அண்ணா அறிவாலயத்திற்க்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஒவ்வோரு இடமாக கருவி மூலம் சோதனை நடத்தினர். சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Comments are closed.