அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைக்கேடு: 37 பேர் பணி நீக்கம்

0

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு விடைத்தாள் முறைகேட்டில் ஈடுபட்ட 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்ய முடிவு.

துணைவேந்தர் சூரப்பா தலைமையில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில், அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு விடைத்தாள் முறைகேட்டில் ஈடுபட்ட 37 தற்காலிக பணியாளர்களை ஒப்புதலுக்குப் பின் நடவடிக்கை

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளில் விடைத்தாள்களை மாற்றி வைத்து முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் 7 மண்டலங்களை சேர்ந்த 37 தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்ய பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

விடைத்தாள் முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தி வந்த நிலையில், விசாரணை முடிவில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 37 தற்காலிக பணியாளர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து நடைபெற்ற பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், இதை பற்றி ஆலோசிக்கப்பட்டது. சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் 37 தற்காலிக பணியாளர்கள் 37 பேரை பணி நீக்கம் செய்து பதிவாளர் குமார் உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.