கௌரி லங்கேஷ் கொலை வழக்கு: சிக்கினார் இந்துத்துவ தீவிரவாதி!

0

கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி பத்திரிக்கை ஆசிரியரும், இலக்கிவாதியுமான கௌரி லங்கேஷ்  காரில் சென்றுகொண்டிருந்த போது, அவரது வீட்டுக்கு வெளியிலேயே இந்துத்துவ தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இவரின் கொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் லங்கேஷ் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனார்.

கர்நாடகாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதற்கும் கொலைகளை நடத்துவதற்கும் இந்துத்துவ அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக கர்நாடகா காவல்துறை தெரிவித்தது. மேலும் கௌரி லங்கேஷ் படுகொலையை விசாரித்த வரும் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்த பலருக்கு இதில் தொடர்பிருப்பதாகவும், அவர்களை குறித்தான தகவல்களை கர்நாடகா காவல்துறையின் உள்துறை பாதுகாப்பு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்தது.

இதுவரை சனாதன் சன்ஸ்தா, இந்து ஜனஜாக்ருதி சமிதி, இந்து யுவ சேனா மற்றும் ஸ்ரீராம் சேனா போன்ற இந்துத்துவ அமைப்பை சேர்ந்த ஆறு பேர் இதுவரை கௌரி லங்கேஷ் படுகொலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலையில் மேலும் பல குற்றவாளிகள் தலைமறைவாகியுள்ள நிலையில் ருஷ்கேஷ் தேவ்திகார் என்ற குற்றவாளி ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் தனிப்படை போலீஸால் கைது  செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.