TRP மோசடியில் சிக்கிய அர்னாப் கோஸ்வாமி மீது சட்ட நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது

0

TRP மோசடி வழக்கில் தன்னை அவமதிப்பதவர்கள் மீது அவதூறு வழக்கு செய்யப்போவதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி தெரிவித்ததற்கு, மும்பை காவல்துறை கமிஷனர் பரம் பீர்சிங் அர்னாப் கோஸ்வாமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் எல்லா உரிமையும் தங்களிடம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

TRP ரேட்டிங்கை போலியாக அதிகரித்துக்காட்டி மோசடியில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டி.வி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மும்பை காவல்துறை கமிஷனர் பரம் பீர் சிங், “சட்ட நடவடிக்கை எடுக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. இதை பற்றி நாங்கள் எதுவும் கூறவில்லை. அவர் செய்வதை செய்யட்டும். அது அவரது உரிமை. ஆனால் அர்னாப் கோஸ்வாமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் எல்லா உரிமையும் தங்களிடம் உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அர்னாப் கோஸ்வாமி மும்பை காவல்துறை அதிகாரிகள் விலைக்கு சென்றுவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.