ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

0

கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக் கடந்த 2018ஆம் ஆண்டில் தற்கொலை செய்துக்கொண்டார். அவரை தற்கொலை செய்ய தூண்டிய அர்னாப் மீது புகார் உள்ளது. இந்நிலையில் அன்வய்-க்கு அர்னாப் உள்பட 3 பேர் ரூ. 5.40 கோடி தராததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

தனது தற்கொலைக்கு காரணம், ரிபப்ளிக் டிவியின்  ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி என்று பெயரைக குறிப்பிட்டும் உள்ளார். பின்னர் இந்த வழக்கின் விசாரணைக்காக காவல்துறை அர்னாப் வீட்டிற்கு சென்றுஅவரை  கைது செய்தனர்.

இதனையடுத்து அர்னாப் உள்ளிட்ட 3 பேரையும் அலிபக் மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூன்று பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments are closed.