“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி

0

கொரோனா தாக்குதல் அதிகமுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் மீது ஆரோக்யா சேது செயலி கட்டாயமாக்கப்பட்டிருப்பது, அவர்களை உளவுபார்ப்பதற்கு என்று தலைவர் ராகுல் காந்தி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள ராகும் காந்தி, “ஒரு தனியார் அமைப்பால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையின் மீது, எந்த அமைப்பு ரீதியான கண்காணிப்பும் இல்லை. ஆரோக்யா சேது செயலி என்பது ஒரு அதிநவீன கண்காணிப்பு அமைப்பாகும். இது ஒரு தனியார் அமைப்பால் இயக்கப்படுகிறது. இதற்கென முறையான கண்காணிப்பு அமைப்பு கிடையாது. இதனால், தனிநபர்களின் பாதுகாப்பு, தனியுரிமைகள் என மக்களை உளவுப்பார்க்க இச்செயலி உதவகிறது.

தொழில்நுட்பம் என்பது நம்மை பாதுப்பாக வைத்திருப்பதற்குதானே தவிர மக்களை, அவர்களுக்கு தெரியாமல் விருப்பமின்றி உளவுபார்க்கவும், பயத்தை ஏற்படுத்தவும்கூடாது” என்று ராகுல் காந்தி தெவித்தார்.

ஆனால், ராகுலின் இக்கருத்திற்கு பதிலளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ராகுலின் இக்குற்றச்சாட்டு சம்பந்தமில்லாத ஒன்று. கொரோனா பரவலுக்கு எதிரான மக்களைப் பாதுகாப்பதற்கு இந்த செயலி பெரிதும் பயனளிக்கிறது. மேலும் இது வலுவான பாதுகாப்பு என்று அவர் கூறினார்.

 

Comments are closed.