பாலியல் வழக்கு: ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரிய சாமியார் ஆசாராம் பாபுவின் மனு தள்ளுபடி!

0

ஆசிரமத்தில் தங்கி படித்துவந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த சிறுமியை,சாமியார் ஆசாராம் பாபு பாலியல் தொல்லை செய்துவிட்டதாக போலிஸில் புகார் அளித்திருந்தார்.

உத்தரப பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த சிறுமியை, ஆசிரமத்தில் தங்கி படித்துவந்தபோது ஆசாராம் பாபு தன்னை கற்பழித்து விட்டதாக போலிஸில் புகார் அளித்திருந்தார். இதுதவிர மேலும் பல கற்பழிப்பு குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டன.

இந்த வழக்கில் ஜோத்பூர் நகரில் உள்ள நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்றது.  கடந்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி இவ்வழக்கிற்கு தீர்ப்பு அளித்த நீதிபதி மதுசூதன் சர்மா ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆசாராம் பாபுவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யவேண்டி அவரது வழக்கறிஞர்கள் ஷிரிஷ் குப்தே மற்றும் பிரதீப் சவுதரி ஆகியோர் ஜோத்பூர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

‘ஆசாராம் பாபுவின் மீது குற்றம்சாட்டிய பெண் 18 வயதை கடந்தவர். அதனால், சிறார் வன்கொடுமை சட்டமான ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது சரியல்ல’ என இந்த மனு தொடர்பான வாதத்தின்போது ஆசாராமின் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், குற்றம் நடந்தபோது பாதிக்கப்பட்ட பெண் சிறுமியாக இருந்ததாக ஆரம்பத்தில் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய கீழமை நீதிமன்றம் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டி, ஆசாராம் பாபு சார்பில் தாக்கல் செய்த மனுவை இன்று தள்ளுபடி செய்தனர்.

Comments are closed.