குடியுரிமை சட்டத்திருத்தம்: ஹிட்லருடன் அமித்ஷாவை ஒப்பிட்ட ஒவைஸி!

0

மக்களவையில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதையடுத்து இரவு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார்.

வாக்குப்பதிவில் 311 எம்.பிக்கள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவும், 80 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். பெரும்பான்மை ஆதரவு பெற்றநிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

இந்நிலையில், மக்களவையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரான அசாதுதீன் ஒவைஸி பேசுகையில், “இந்த மசோதா இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. இந்த சட்டம் மூலம் இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக்கும். “இது ஹிட்லரின் சட்டத்தை விட மோசமானது. அதுமட்டுமின்றி உங்களிடம் (சபாநாயகர்) நான் ஓர் வேண்டுகோள் விடுக்கின்றேன். இத்தகைய சட்டத்திலிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்.

இல்லையெனில் இஸ்ரேலின் குடியுரிமை சட்டம் போன்றவற்றை கொண்டுவந்த ஹிட்லருடன் உள்துறை அமைச்சரின் பெயரும் இடம்பெறும். நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அவமரியாதை செய்கிறது இந்த சட்டம்” என்றார் ஒவைஸி.

நமது நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கும் பாஜக இத்தகைய சட்டத்தின் நகலை கிழிக்கிறேன் என்று கூறி” மசோதாவின் நகலையும் மக்களவையில் கிழித்தெறிந்தார்.

Comments are closed.