ஆஷிஃபா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புலனாய்வு போலிஸார் மீது வழக்குப்பதிய உத்தரவு

0

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிஃபா என்ற 8 வயது சிறுமி, ஒரு கும்பலால் கடந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி கடத்தப்பட்டார். அதன் பின் அங்குள்ள ஒரு கிராமக் கோயிலில் அடைத்து வைக்கப்பட்டார். அங்கு மயக்க நிலையில் நான்கு நாள்களுக்கு வைக்கப்பட்டிருந்த ஆஷிஃபா, கூட்டாக பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்த கொலையில் தொடர்புடையவர்களுக்கு ஆதராவாக நடத்தப்பட்ட பேரணியில் அப்போதைய ஜம்மு காஷ்மீர் அமைச்சர்கள் கலந்துகொண்டார்கள்.

மேலும் இந்த சம்பவம் நடைபெற்ற கோயிலின் காப்பாளர் சஞ்சி ராம், சிறப்பு காவல்துறை அதிகாரி தீபக் கஜூரியா, அதே பகுதியைச் சேர்ந்த பர்வேஷ்குமார் ஆகிய மூவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட சஞ்சிராம் உள்ளிட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய உதவி ஆய்வாளர் ஆனந்த் தத்தா, தலைமைக் காவலர் திலக் ராஜ் மற்றும் சிறப்பு காவல்துறை அதிகாரி சுரேந்தர் வர்மா ஆகிய மூவருக்கும் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் இவ்வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் விசாரணை என்ற பெயரில் அப்பாவிகளைத் துன்புறுத்தியதாகவும், பொய் வாக்குமூலம் அளிக்குமாறு அவர்களுக்கு நெருக்கடி அளித்துள்ளனர்.

இதனால், சிறப்பு புலனாய்வுக் குழுவைச் சேர்ந்த காவல்துறை எஸ்எஸ்-பியான ஓய்வு பெற்றுள்ள ஆர்.கே.ஜல்லா, ஏஎஸ்பி பீர்ஸாதா, டிஎஸ்பி-க்கள் ஷேதம்பரி சர்மா, நிசார் ஹுசேன், உதவி ஆய்வாளர் வானி, குற்றப்பிரிவைச் சேர்ந்த கேவல் கிஷோர் ஆகிய 6 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Comments are closed.