பொருளாதார வீழ்ச்சி: உற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட் நிறுவனம்!

1

ஆட்டோ மொபைல் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அசோக் லேலண்ட் ஊழியர்களுக்கு  கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளதால் அனைத்து முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

மேலும் பல நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. அந்த வகையில் சென்னை எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனம்  10 நாட்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்தது. மேலும் அதன் ஊழியர்களுக்கு வரும் 6 ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு கட்டாய விடுமுறையும் அறிவித்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவனமும் வருகிற 7 மற்றும் 9 தேதிகளில் தொழிற்சாலைகளை மூடுவதாக மூன்று நாட்களுக்கு முன் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Discussion1 Comment