இந்திய பொருளாதார சரிவு: வீழ்ச்சியில் அசோக் லேலண்ட் நிறுவனம்

0

நாட்டில் நிலவி வரும் பொருளாதாரம் நெருக்கடி காரணமாக ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், கனரக வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனமும் இந்த பெருளாதார சரிவு காரணமாக பெரும் பாதிப்படைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மாருதி சுசுக்கியை நிறுவனத்தை தொடர்ந்து, அசோக் லேலண்ட் நிறுவனமும் ஜூலை – செப்டம்பர் காலாண்டுக்கான வருவாய் விவரங்களை சமீபத்தில் வெளியிட்டது. அதில், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 48.4 சதவிகித வீழ்ச்சியுடன் 3 ஆயிரத்து 929 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, 2018-ம் ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் 527 கோடியே 70 லட்சம் ரூபாய் லாபம் அடைந்துள்ளது. ஆனால் தற்போது வெறும் 38 கோடி ரூபாய் மட்டுமே லாபம் ஈட்ட முடிந்துள்ளது. இது 2018ஆம் ஆண்டின் இதே காலாண்டில் கிடைத்த லாபத்தை விட 92.6 சதவீதம் குறைவாகும்.

இதனால் பங்குச்சந்தையில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்குகள் 0.13 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.