காங்கிரஸின் கருணையால் முஸ்லிம்கள் வாழவில்லை: கடவுளால் தான் வாழ்கிறோம்- ஒவைஸி

0

மகாராஷ்டிர மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் வரும் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி மேற்கு தொகுதியில் போட்டியிடும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, நேற்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,

“நடுக்கடலில் ஒரு கப்பல் மூழ்கும்போது அந்த கப்பலின் கேப்டன், பயணிகள் ஒவ்வொருவரையும் அதிலிருந்து காப்பாற்றி பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் எனும் கப்பல் மூழ்கிக் கொண்டுவரும்போது, கேப்டனாக இருந்த ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை காப்பாற்றாமல் பொறுப்பற்ற முறையில் கட்சித் தலைவர் பதவில் நீடிக்காமல் சென்றுவிட்டார்.

கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் கருணையால் முஸ்லிம் மக்கள் வாழவில்லை. கடவுளின் கருணை ஆகியவற்றால்தான் உயிரோடு இருக்கிறோம்.

பாஜக அரசு கொண்டுவந்த முத்தலாக் தடை சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு விரோதமானது. முஸ்லிம் பெண்களுக்கு நீதி அளித்துவிட்டதாக பிரதமர் மோடி கருதினால் அது தவறானது” என்றார் ஒவைஸி.

Comments are closed.