அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் CAA சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் -ராகுல் காந்தி

0

அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் தெரிவித்துள்ளார்.

சிவசாகர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அஸ்ஸாமை பிளவுபடுத்தும் எந்த அதிகாரத்தையும் அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டார். மேலும் மக்களிடையே வெறுப்பை பரப்ப விரும்புபவர்களுக்கு மாநில மக்களும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து பாடம் கற்பிக்கும் என்று கூறிய ராகுல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அனுமதிக்க மாடோம் என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டம் கொண்டு வரப்பட்டவுடன் நாடு முழுவதும் அதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட், இந்த சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என கடந்த ஆண்டு கூறிய நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில், சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படாது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் உச்சநீதிமன்றத்திலும் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த முதல் மாநிலம் கேரளாவாகும்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை மேற்குவங்க மாநிலத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.