அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத இஸ்லாமிய தலைவர்கள் பெயர்!

0

அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பின் இறுதிப்பட்டியலில் இஸ்லாமிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என தெரியவந்துள்ளது.

அஸ்ஸாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் தேசிய குடிமக்கள் பதிவேடு  இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில் 3 கோடி 11 லட்சத்து 21 ஆயிரத்து நான்கு பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. 19 லட்சத்து ஆறாயிரத்து 687 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை.

இந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் எம்எல்ஏக்கள் உள்பட பல முக்கிய தலைவர்களின் பெயர்களும் விடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இஸ்லாமிய அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களும்  இப்பட்டியலில் இடம்பெறவில்லை.

தல்ஹான் காங்கிரஸ் எம்.எல்.ஏ இலியாஸ் அலியின் மகள் பெயர் இடம்பெறவில்லை. அகில இந்திய ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவான ரஹ்மான் பெயரும் இடம்பெறவில்லை என தெரியவந்துள்ளது.

மாநிலத்தில் பல அரசியல் கட்சி தலைவர்கள் பெயர்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், குறிப்பாக இஸ்லாமிய தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் பெயர்கள் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதில் விடுப்பட்ட 19,06,687 பேரில், இஸ்லாமியர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.