அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 19 லட்சம் பேர் நீக்கம்: இஸ்லாமியர்களை குறிவைக்கும் பாஜக!

0

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பின் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டதில் 19 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறிந்து நாட்டை விட்டு வெளியேற்ற NRC தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. இதன் இறுதிப்பட்டியல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டதில் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி விளக்கமளித்த அசாம் அரசு, இந்த பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்களை சேர்க்க அவகாசம் அளிப்பதாக கூறியது.

விடுபட்ட பலரும் தங்கள் பெயரை மீண்டும் சேர்க்ககோரி மறு விண்ணப்பங்கள் அளித்திருந்தனர். அவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதிவாய்ந்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து NRC ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், “இந்த பட்டியலில் 3,11,21,004 பேர் இடம்பெற்றுள்ளனர். 19,06,657 நபர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. முறையான ஆவணங்களை சமர்ப்பிக்காததால் அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த இறுதிப்பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், தங்கள் இந்திய குடியுரிமையை நிரூபிக்க வேண்டும்” என்றார்.

இதில் விடுப்பட்ட 19,06,657 பேரில், இஸ்லாமியர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.