அஸ்ஸாமில் இருக்கும் முஸ்லிம்கள் இந்தியர் இல்லையா…?

0

கடந்த மாதம் அஸ்ஸாம் மாநிலத்தில் இறுதி தேசிய குடிமக்கள் பட்டியல் வெளியானது. அதில் 19 லட்சம் மக்கள் விடுபட்டிருந்தனர்.

அஸ்ஸாமில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி (தேசிய குடியுரிமைப் பதிவேடு) என்.ஆர்.சி. பட்டியலில், 19,06,657 நபர்கள்சேர்க்கப்படவில்லை. முறையான ஆவணங்களை சமர்ப்பிக்காததால் அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது.

இது குறித்து பாஜகவின் தலைவரும் அஸ்ஸாம் மாநில அமைச்சருமான ஹிமந்தா பிஸ்வ சர்மா தெரிவித்ததாவது, “எங்களுடைய எல்லை காவலர்கள், சந்தேகத்துக்குரியவர்களை கேள்வி கேட்கும், விசாரிக்கும், கைதும் செய்யும். இது தொடரும்” என தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து நாட்டை விட்டு அனுப்ப, இத்தகைய சட்டப் பிரிவுகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இதை எதிர்த்து ஒரு சிறுபான்மையினர் அமைப்பு வழக்கு தொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

“வெளிநாட்டவர் தீர்ப்பாயம்தான் அனைத்தையும் முடிவு செய்யும் எனில், என்.ஆர்.சி.க்கான மதிப்பு என்ன? அப்படியெனில் என்.ஆர்.சி பயனற்றதாகும்” என்றனர் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

முஸ்லிம்களை அஸ்ஸாமிலிருந்து வெளியேற்றுவதற்கக புதிதுபுதிதான வழிகளை, சட்டப் பிரிவுகளை ஏற்படுத்தி வருகிறது பாஜக அரசு.

Comments are closed.