பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு

0

பாபர் மசூதி இடிப்பு வழக்கை லன்கோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 20ஆம் தேதி முடிக்கப்படிருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நீதிமன்றம் மூடப்பட்டதால், வழக்கு விசாரணையை நடத்தவில்லை. இதனால் இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை காணொலி முறையில் நடத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இதனிடையே, 3 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த இருப்பதால், அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பக்கோரி, சிறப்பு நீதிமன்றத்தில் எதிர் தரப்பினர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் விசாரணை, சிறப்பு நீதிபதி எஸ்.கே.யாதவ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, சாட்சிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகள் அடங்கிய பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு எதிர் தரப்பினருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை, வரும் 18-ஆம் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மஸ்ஜித் கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இருப்புக்கு காரணமாக இருந்த, பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர், ஜோஷி, உமா பாரதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்ெ கல்யாண் சிங் உள்ளிட்டொர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அந்த வழக்கின் விசாரணை, உத்தர பிரதேசத் தலைநகர் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 27 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை தீர்ப்பு வரவில்லை.

அதை தொடர்ந்து, வழக்கின் அனைத்து சாட்சிகளையும் 6 மாதங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் சிபிஐ சிறப்பு நீதின்றத்திற்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்ததால், கூடுதல் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்திற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் கடிதம் எழுதியிருந்தார்

அவரது கோரிக்கையை பரிசீலித்த உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 31-க்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

Comments are closed.