பாபர் மஸ்ஜித் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்

0

பாபர் மஸ்ஜித் தீா்ப்பை எதிா்த்து வரும் 9ஆம் தேதிக்குள் மறுஆய்வு மனு தாக்கல் செய்யவிருப்பதாக, அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச்செயலாளா் மெளலானா ரஹ்மானி தெரிவித்ததாவது, “நீதித்துறை மீது முஸ்லிம் சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆகவே, இந்த தீர்ப்பை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம். அந்நிலையில் பாபர் மஸ்ஜித் தீா்ப்புக்கு பிறகு நீதித்துறை மீதான எங்களது நம்பிக்கை வலுவிழந்துள்ளது.

மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று 99 சதவீத முஸ்லிம்கள் விரும்புகின்றனா். எனவே, மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படுவதற்கு எதிரான மனநிலையில் பெரும்பாலான முஸ்லிம்கள் உள்ளதாக கூறுவது முற்றிலும் தவறானது. மேலும், இந்த தீா்ப்பில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன” என்றார் ரஹ்மானி.

இந்த வழக்கின் முக்கிய மனுதாரா்களில் ஒருவரான சன்னி வக்ஃபு வாரியம், தீா்ப்பை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று தெரிவித்தது. எஸ்.டி.பி.ஐ கட்சி மறு சீராய்வு மனு தாக்கல் செய்யபோவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியமும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யபோவதாக அறிவித்துள்ளது.

Comments are closed.