அயோத்தி வழக்கை மத்தியஸ்தம் செய்யும் குழுவை மாற்றியமைக்க வேண்டும்!

0

அயோத்தி வழக்கை மத்தியஸ்தம் செய்யும் குழுவை மாற்றியமைக்க வேண்டும்!- நிர்மோஹி அகோரா அமைப்பு வேண்டுக்கோள்!

1992 டிசம்பர் 6, அன்று இந்துத்துவ அமைப்புகளால் இஸ்லாமியர்களின் இறையில்லமான பாப்ரி மஸ்ஜித் இடித்து தள்ளப்பட்டது. பாப்ரி மஸ்ஜித் இடிப்பை குறித்து விசாரணை நடத்தப்படும்போது நிலம் யாருக்கு சொந்தம் என்பது தான் வழக்கின் பிரதானமாக நீதிமன்றத்தில் கருதப்படுகிறது.

அயோத்தியில் உள்ள அந்த குறிபிட்ட நிலம் இந்துக்களின் நம்பிக்கை கடவுளாக பார்க்கப்படும் ராமர் பிறந்த நிலம் என்பதாக சிலர் நம்புகிறார்கள். ஆனால் அங்கு 15ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்களுக்கு முகலாய மன்னர் பாபர் அங்கு பள்ளியை நிறுவி தொழுகையை நடத்த வழிவகை செய்தார்.

சுதந்திர இந்தியாவுக்கு முன்பிருந்து இந்து முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்க ஆங்கிலேயர்களால் உண்டாக்கபட்ட விவகாரம் தான் பாப்ரி மஸ்ஜித் விவகாரம். இதன் நீட்சியாக அங்கு இராமர் பிறந்தார், அங்கு கோயில் இருந்தது, அதனை பாபர் இடித்து பள்ளிவாசல் கட்டிவிட்டார் என்று சுந்ததிர இந்தியாவுக்கு பிறகு இந்துத்துவ அமைப்பினரால் பொய்யுரைக்கப்பட்டு வந்தது. இதன் விளைவாக அந்த பள்ளிவாசல் நீதிமன்றத்தால் பூட்டப்பட்டு பிறகு இந்துத்துவ அமைப்பினரால் சட்டவிரோதமாக தரைமட்டமாக இடிக்கபட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நெடுகாலமாக இருந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் இந்த வழக்கில் ஒரு தீர்ப்பினை வழங்கியது.

அதாவது மொத்த இடத்தின் ஒரு பகுதியை இந்து அமைப்பான நிர்மோஹி அகோரா அமைப்பிற்கும், ஒரு பகுதி உத்திரப்பிரதேச வக்ஃபூ வாரியத்திற்கும் மீதமுள்ள பகுதியை சங்பரிவார் அமைப்பான ராம ஜென்ம பூமி அமைப்பிற்கும் கொடுக்கபட்டது. ஆனால் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத நிர்மோஹி அகோரா மற்றும் உ.பி. வக்ஃபூ வாரியம் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்று வரும்பட்சத்தில் கடந்த மார்ச் மாதம் 8 அன்று வழக்கை விசாரித்து வரும் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அயோத்தி வழக்கில் இருதரப்பிற்கு மத்தியில் மத்தியஸ்தம் செய்து வைக்க மூன்று நபர்கள் அடங்கிய குழுவை நியமித்தது. நியமிக்கபட்ட அந்த குழு 8 வாரங்களில் இருதரப்பினரிடமும் பேசி வழக்கை சுமூகமாக முடித்து வைக்க கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. அந்த குழுவில் முன்னாள் நீதிபதி கலிபுல்லாஹ், மதபிரச்சாரம் செய்யும் ரவிசங்கர் மதுரம் முன்னணி வழக்கறிஞர் ஸ்ரீ ராம் பஞ்சு ஆகியோர் இருகின்றனர்.

இந்த குழு முதல் கட்ட பேச்சுவார்த்தையை கடந்த மார்ச் 13 அன்று நடைப்பெற்றது. இந்த முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில் வழக்கின் முக்கிய மனுதாரரான நிர்மோஹி அகோரா அமைப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில் நீதிமன்றம் நியமித்த குழுவில் மேலும் இரண்டு ஓய்வு பெற்ற மூத்த நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது. மேலும் மத்தியஸ்தம் பேச்சுவார்த்தைகள் தற்போது அயோத்திக்கு அருகே உள்ள ஃபைசபாத்தில் நடைப்பெற்று வருகிறது. இது இருபிரிவினர் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்குகிறது. ஆகையால் பேச்சுவார்த்தைகளை டெல்லி அல்லது நடுநிலையான இடத்திற்கு மாற்ற வேண்டும். மற்றும் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் வழக்கின் முக்கிய மனுதாரர்களான தங்களையும் (நிர்மோஹி அகோரா) உ.பி. வக்ஃபூ வாரியத்தை அழைத்து பேச வேண்டும். அவசியமற்ற அமைப்புகளை அழைத்து பேசுவது தங்களுக்கு (நிர்மோஹி அகோரா) மகிழ்ச்சியளிக்கவில்லை என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் இரண்டாவது கட்ட மத்தியஸ்தம் பேச்சுவார்த்தைகல் வரும் மார்ச் 27,28,29 ஆகிய தினங்களில் நடைப்பெற இருக்கிறது. நீதிமன்றம் நிர்மோஹி அகோரா மனுவை எப்படி எடுத்துகொள்கிறது என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். மேலும் மத்தியஸ்தம் குழுவில் இருக்கும் மத பிரசாரர் ரவிசங்கர் முஸ்லிம்கள் ஏன் பாப்ரி பள்ளி விவகாரத்தில் விட்டுகொடுத்து போக கூடாது. அது உங்கள் நம்பிக்கைக்கு சம்பந்தமான விடயம் கிடையாது. இந்துக்களின் நம்பிக்கையின் விடயம் என்று பேசியது மிகுந்த சர்ச்சையை உண்டாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.