பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்

0

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் (சிபிசிபி) பதிவு செய்யப்படாத பாபா ராம்தேவின் பதஞ்சலி, ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் விளக்கம் அளிக்ககோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பாபா ராம்தேவின் பதஞ்சலி, ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. அது தொடர்பாக அவர்கள் உரிய பதிலும் அளிக்கவில்லை.

இந்த நிறுவனங்கள் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை. எனவே அவற்றின் செயல்பாடுகளை ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது என காரணம் கேட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த 8 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இருப்பினும் செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஆதார அடிப்படையிலான மதிப்பீடு குறித்த தகவல்களை பதஞ்சலி,ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் வழங்கவில்லை. அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களுக்கு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, அந்த நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களின் சுற்றுச்சூழல் தணிக்கை குறித்த தீர்ப்பாயத்தின் உத்தரவு தொடர்பாக, நிபுணர் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Leave A Reply