பாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்

0

பாபர் மஸ்ஜித்  நில வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இறுதி வாதங்கள் கடந்த 16ஆம் தேதியுடன் நிறைவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்து மற்றும் முஸ்லிம் தரப்பினர் தங்கள் ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர்.

ராம் லல்லா தரப்பு தாக்கல் செய்த ஆவணத்தில், அயோத்தியில் பபர் மஸ்ஜித் கட்டப்படுவதற்கு முன்பிருந்தே அந்த இடத்தில் இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். ராமர் பிறந்த இடத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தனர்.

பின்னர்  முஸ்லிம் தரப்பினரும்தங்கள் ஆவணத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தனர்.  மேலும் பல்வேறு தரப்பினருக்கும் அந்த ஆவணத்தின் நகலை அனுப்பி வைத்தனர். அத்துடன் பொது வெளியிலும் அவர்கள் வெளியிட்டனர். இதனால் முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொள்வதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இதையடுத்து, முஸ்லிம் தரப்பினர் தாக்கல் செய்த ஆவணங்களை ஏற்றுக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Comments are closed.