பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

0

பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கை விசாரித்து வரும் லக்னோ சிறப்பு நீதிமன்றம், ஜூன் 4-ஆம் தேதி முதல் பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிபதி எஸ்.கே.யாதவ் வியாழக்கிழமை உத்தரவிடடுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மஸ்ஜித் கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பாஜக-ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்டது. இதற்கு பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர், ஜோஷி, உமா பாரதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்டவர்கள் முன்னோடியாக இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்களை சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகளிடம் கடந்த மார்ச் 6ஆம் தேதியுடன் சிறப்பு நீதிமன்றம் விசாரணையை நிறைவு செய்துவிட்டது. அதன் பின்னர், மார்ச் 24-ஆம் தேதி முதல் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு குற்றம்சாட்டப்பட்ட சிலருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவியதால், வழக்கு விசாரணை நடைபெறவில்லை.

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 27 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இவ்வழக்கு விசாரணையை 6 மாதங்களில் நிறைவு செய்யுமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், வழக்கு விசாரணையை முடிக்க கூடுதல் அவகாசம் அளிக்குமாறு, உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதி எஸ்.கே.யாதவ் கடிதம் எழுதியிருந்தார்.

அவரது கோரிக்கையை கடந்த 8ஆம் தேதி பரிசீலித்த உச்சநீதிமன்றம், விசாரணையை, வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் நிறைவு செய்யுமாறு சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது.

 

Comments are closed.