டெல்லி வன்முறை: முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்க போவதில்லை -ஒவைசி

0

டெல்லி கலவரம் தொடர்பாக மக்களவையில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி மத்திய பாஜக அரசிக்கு கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றம் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய உவைசி “டெல்லி வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது. மூன்று நாட்கள் தொடர்ந்த வன்முறையில் உயிர்கள், வீடுகள் மற்றும் உறவினர்களை இழந்த முஸ்லிம்களுக்கு என்ன நீதி கிடைக்க போகிறது? அமித்ஷா உள்துறை அமைச்சராக பேசவில்லை. பாஜகவினர் முஸ்லிம்களுக்கு அநீதியைத்தான் பரிசாக அளித்துள்ளார்கள்.

1984 கலவரத்தை தொடர்ந்து “சீக்கியர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பாபர் மஸ்ஜித் இடிப்பு மற்றும் 2002 குஜராத் கலவரங்களை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை. டெல்லியில் நடந்த இந்த வன்முறைக்கு கூட எந்த ஒரு நீதியும் வழங்கப்படமாட்டாது ”என்றார் ஒவைசி.

டெல்லி காவல்துறை விசாரணை மற்றும் 2500க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது. கைதானவர்களின் பெயர்களை போலீஸ் வெளியிட வேண்டும். 1000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வீடுகள், கடைகள் எரிக்கப்படுள்ளன. இதற்கு என்ன பதில்?” என்றும் ஒவைசி கேள்வி எழுப்பினார்.

Comments are closed.