பாபா் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு

0

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்த பாஜகவின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 32 பேர் விடுதலையை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மஸ்ஜித் 1992இல் இந்துத்துவ பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது. பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட 32 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

கடந்த 28 ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணையின் 32 பேரையும் விடுதலை செய்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ அட்வனிதரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.

இந்நிலையில் அயோத்தியில் வசிக்கும் ஹாஜி சையத் அஹ்லக் அஹமது மற்றும் ஹாஷி மஹபூப் ஆகியோர் சி.பி.ஐ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

Comments are closed.