ராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்

0

அயோத்தியில் பாபர் மஸ்ஜிதை இடித்து ராமர் கோவிலுக்கான பூமி பூஜைக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோவிலுக்கான அடிக்கல்லை நாளை (புதன்கிழமை) மோடி நாட்டுகிறார்.

இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தர ப்ரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள், கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகள் என பல பூசாரிகள் பங்கேற்கின்றனர்.

இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக, சாமியார்கள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் இந்த சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் “அயோத்தி ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நாள், வாழ்க்கையில் ஒரு திருநாளாகும். அதை நேரில் தரிசித்து மகிழ, விழா நிர்வாகிகள் எனக்கு அழைப்பு அனுப்பவில்லை எனில் நான் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வேன்” என ரவீந்திரகுமார் துவேதி என்ற இந்து மகா சபை பிரமுகர் மிரட்டல் விடுத்துள்ளார்.

Comments are closed.