பாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

0

பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து வந்த புகழ் பெற்ற பாபர் மஸ்ஜிதை 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 தேதி இந்துத்திவ பயங்கரவாதிகள் சேதப்படுத்தி தரை மட்டமாக்கினர்.

வழிப்பாட்டு தளமாக இருந்து வந்த பாபர் மஸ்ஜிதை இந்துக்களின் வழிப்பாட்டு தளம் என இந்துத்துவ பயங்கரவாதிகள் உரிமை கொண்டாடினர்.

மேலும் பாஜகவினர் அயோத்தி ராமர் பிறந்த இடம் என்றும் இந்துக்களுக்குத்தான் அந்த இடம் சொந்தம் என்றும் விஷமமான பிரசாரங்களை செய்து வந்தனர்.

இதனால் பாபர் மஸ்ஜித் மீது இந்துத்துவ பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாபர் மசூதியை இடித்த குற்றத்தில் பாஜகவின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் 2017 மே மாதம் முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்றம், பாபர் மஸ்ஜிதை இடித்து தரைமட்டமாக்கிய வழக்கை லக்னோ சிபிஐ நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.