பாபர் மஸ்ஜித் வழக்கு: அடுத்த வாரம் இறுதி தீர்ப்பா…?

0

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக பாபர் மஸ்ஜித் வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்க உள்ளதாக உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாபர் மஸ்ஜிதுக்கான இறுதி தீர்ப்பு, இன்னும் குறுகிய நாட்களில் வழங்கப்படவுள்ளதால் உத்தர பிரதேசம் மட்டுமின்றி நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் நவம்பர் 13ஆம் தேதி தீர்ப்பு வழங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அப்போதும் தீர்ப்பு வழங்கவில்லையென்றால், 14 அல்லது 15ஆம் தேதி தீர்ப்பு வெளிவரும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் யாருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும் இந்தியர்கள் ஏற்றுகொள்ள வேண்டும் என்பது போல நரேந்திர மோடி பேசியதும், டிசம்பர் மாதம் ராமர் கோயில்கட்டத் தொடங்குவோம் என்று பாஜக எம்.பி பேசியதும் பலரின் கவனத்தையும் தீர்ப்பு குறித்த பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால், நாடின் எல்லா பகுதிகளிலும் இந்த தீர்ப்பின் காரணமாக சர்ச்சைகள் நடைபெறுவதை தவிர்க்க பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Comments are closed.