முன்னாள் பிரதமர்கள் சரியாக செயல்பட்டிருந்தால் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டிருக்காது

0

அன்றைய பிரதமா் நரசிம்மராவ் தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால், பாபா் மஸ்ஜித் இடிக்கப்பட்டிருக்காது என்று மத்திய உள்துறையின் முன்னாள் செயலா் மாதவ் கோட்போலே தெரிவித்துள்ளாா்.

பாபர் மஸ்ஜித் இடிப்பு சம்பவத்தின்போது மத்திய உள்துறை மற்றும் நீதித் துறையின் செயலராக அமைச்சகத்தின் செயலராக இருந்த கோட்போலே,  ‘பாபா் மசூதி-ராமா் கோயில் குழப்பம்: இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கான அமிலச் சோதனை’ என்ற தலைப்பில் தற்போது புத்தகம் ஒன்றை எழுதியுள்ளாா்.

இதுகுறித்த தெரிவித்த அவர், “பாபா் மஸ்ஜிதுக்கு பயங்கரமான அச்சுறுத்தல் இருந்தபோது, அப்போதைய பிரதமா் நரசிம்மராவ் மட்டுமின்றி, முன்னாள் பிரதமா்கள் ராஜீவ் காந்தி மற்றும் வி.பி. சிங் ஆகியோரும் தகுந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டனா்.

அரசமைப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசின் அதிகாரம் கொண்டிருந்த நரசிம்ம ராவ், இந்த விவகாரத்தை முறையாக கையாளுவதாக மாநில அரசு அளித்த உறுதிமொழியை நம்பினார்.

இந்துத்துவா வெறியர்கள் எதிர்ப்பார்த்ததுபோல பாபா் மசூதியை இடிப்பதற்கு மாநில அரசு அனுமதித்துட்டன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மட்டுமல்லாமல், அரசமைப்பு சட்டத்தின் கீழான அனைத்து அமைப்புகளுமே கடமையை செய்ய தவறிவிட்டன. ஆனால், முக்கியமான குற்றவாளி மாநில அரசுதான்.

உத்தர பிரதேசத்தின் அப்போதைய ஆளுநராக இருந்த பி. சத்யநாராயண் ரெட்டியும், மாநிலத்தில் நிலவும் சூழலின் தீவிரத்தை தடுக்க தவறியதோடு, குடியரசுத்தலைவா் ஆட்சியை கொண்டுவருவதற்கு எதிராக பரிந்துரை செய்து தவறிழைத்துவிட்டாா்.

பாபர் மச்ஜித் விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என பல தரப்பினர் முறையிட்டபோதும் நீதித்துறை இன்றுவரை அதை தாமதப்படுத்தி வருகிறது.

மதத்தையும், அரசியலையும் கலந்ததாஒல் இந்த விவகாரம் மேலும் தீவிரமாகிவிட்டது என்று அந்த புத்தகத்தில் மாதவ் கோட்போலே கூறியுள்ளாா்.

Leave A Reply