பாபர் மஸ்ஜித் வழக்கு: இந்து தரப்பினர் புதிய ஆவணங்களை சமர்ப்பிக்ககூடாது- நீதிபதிகள்

0

‘ராம் லல்லா’ இந்து தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் வைத்தியநாதன் முஸ்லிம் தரப்பினரின் வாதத்துக்கு தனது எதிா்வாதத்தை முன்வைத்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

‘பாபா் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கு ராமா் கோயில் இருந்தது என்பது சந்தேகத்திற்க்கு இடமில்லாத ஆதாரம் உள்ளது. அகழாய்வில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது’ என வாதிட்டார்.

இதையடுத்து முஸ்லிம் தரப்பு சாா்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் ராஜீவ் தவன், ‘இந்தியத் தொல்லியல் துறையின் அறிக்கைப்படி, மஸ்ஜித் எழுப்பப்பட்ட இடத்தில் கோயில் இருந்தது என அறுதியிட்டுத் தெரிவிக்கப்படவில்லை’ என்றாா்.  முஸ்லிம் தரப்பினரின் வாதத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், சில ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இந்து தரப்பினா் முயன்றனா். இதற்கு முஸ்லிம் தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

புதிய ஆவணங்கள்  சமர்பிக்க கூடாது:

பின்னர் நீதிபதிகள், ‘அரசியல்சாசன அமா்வு இந்த வழக்கை விசாரித்து வருவதால், புதிய ஆவணங்கள் எதையும் இந்தக் கட்டத்தில் சமா்ப்பிக்க கூடாது. இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதியே இதை அரசியல்சாசன அமா்வு விசாரித்து வருகிறது’ என்றனா்.

அரசியல்சாசன அமா்வில் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. போப்டே, எஸ். அப்துல் நஸீா் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனா். இந்த வழக்கின் விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது. வரும் 18-ஆம் தேதிக்கு மேல் வழக்கு தொடா்பான வாதத்தை முன்வைக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.