பாபர் மஸ்ஜித் இடத்தில் ராம ஜென்மபூமி இருந்ததற்கான ஆதாரம் தேவையில்லை- பாஜக அமைச்சர்

0

பாபர் மஸ்ஜித் நிலம் ராம ஜென்மபூமி இருந்ததற்கான இடம் தான் என்பதற்கு ஆதாரம் தேவையில்லை என பாஜகவை சேர்ந்த கர்நாடக மாநில அமைச்சர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

பாபர் மஸ்ஜித் வழக்கில் மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்தது. ஆனால் சமரச முயற்சி சமரசம் ஏற்படாததால் இவ்ழக்கை உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தொடர்ந்து விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் அக்டோபர் 18ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டமிட்டிருந்த நிலையில் 2 நாள் முன்கூட்டியே நேற்று முன்தினம் விசாரணை நிறைவு செய்தது.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில சுற்றுலா துறை அமைச்சர் சி.டி.ரவி, “பாபர் மஸ்ஜித் வழக்கை எதிர்ப்பார்த்து நாடே காத்துக்கொண்டுள்ளது. அதேபோல நானும் காத்துக்கொண்டுள்ளேன். அயோத்தியில் பாபர் மஸிஜித் இருக்கும் இடம் ராம ஜென்மபூமி தான். இதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. பல ஆயிரம் ஆண்டுகளாகவே இதே நம்பிக்கையில் தான் நாம் வாழ்கிறோம்’’ எனக் கூறினார்.

Comments are closed.