பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்!

1

பாபர் மஸ்ஜிதுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரி மீது தாக்குதல் நடத்திய நடத்திய பெண்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த இக்பால் அன்சாரி என்பவர், பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் செவ்வாய் அன்று இக்பால் அன்சாரி வீட்டுக்குள் திடீரென நுழைந்த வர்திகா சிங் என்ற தேசிய அளவிளான துப்பாக்கிச் சுடும் வீராங்கனை, பாபர் மஸ்ஜித் வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் முத்தலாக் குறித்தும் பேசியுள்ளார்.

சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த வர்திகா சிங், இக்பால் அன்சாரியை தாக்க தொடங்கியுள்ளார். உடனே இக்பால் அன்சாரியின் பாதுகாவலர்கள் வர்திகா சிங்கை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து இக்பால் அன்சாரி அளித்த புகாரின் அடிப்படையில் வர்திகா சிங் மகளிர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Discussion1 Comment