பாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக அமைச்சரின் பேச்சை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

0

சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச கூட்டுறவுத் துறை அமைச்சர் முகுத் பிஹாரி வர்மா, ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்பது எங்களது தீர்மானம். உச்ச நீதிமன்றம் நம்முடையது. நீதித்துறை, இந்த நாடு, ராமர் கோயில் எல்லாம் நம்முடையது’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாபர் மஸ்ஜித் வழக்கில் இஸ்லாமிய சார்பு வழக்கறிஞர் ராஜீவ் தவான், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தில் எழுப்பினார். அப்போது பேசிய ராஜீவ் தவன், ‘அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும்போது ஒருவித அச்சம் கலந்த சூழ்நிலையும் அதிகரிக்கிறது.

இந்த வழக்கில் இஸ்லாமியர்கள் தரப்பில் ஆஜரானதிலிருந்து எனக்கு சிலரிடமிருந்து மிரட்டல்கள் வந்துக்கொண்டுள்ளது.

இது குறித்து பேசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ‘உத்தரப் பிரதேச அமைச்சரின் பேச்சை நாங்கள் நிராகரிக்கிறோம். இது, இந்த நாட்டில் நடைபெறக் கூடாது. இரு தரப்பினரும் சுதந்திரமாக எந்த அச்சமுமின்றி அவர்களுடைய வாதத்தை நீதிமன்றத்தின் முன் வைக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.

Comments are closed.