பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: மறுஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

0

பாபர் மஸ்ஜித் தீர்ப்பை, அப்போதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்து கடந்த நவம்பா் 9ஆம் தேதி ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து தீா்ப்பளித்தது.

மேலும் மஸ்ஜித் கட்டுவதற்காக அயோத்தியில் வேறு இடத்தில் 5 ஏக்கா் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டுமெனன உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனை அடுத்து, இந்த தீா்ப்பில் திருப்தியில்லை என்று கூறி 19 மறு சீராய்வு மனு தாக்கல்கள் உச்சநீதிமன்றத்தில் பெறப்பட்டது.  அந்த மனுவில், ‘சா்ச்சைக்குரிய இடத்தில் இடிக்கப்பட்ட பாபா் மசூதியை மீண்டும் கட்ட உத்தரவிடுவதே உரிய நீதியாகும்’ என்று குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், மறுஆய்வு மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா், சஞ்சீவ் கன்னா ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை (நேற்று) பரிசீலித்து கூறியதாவது: மறு சீராய்வு தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களையும் கவனமாக பரிசீலித்தோம். அதில் மனுக்களை ஏற்பதற்கான எந்த அடிப்படை காரணங்கள் காண முடியவில்லை என்பதால் அனைத்து மனுக்களையும் நிராகரிக்கிறோம் என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

மறுஆய்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டதால், இறுதி வாய்ப்பாக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியும். இதுவே இந்த வழக்கில் சட்டரீதியாக உள்ள கடைசி வாய்ப்பாகும்.

Comments are closed.