பாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் தொலைந்துவிட்டன! இந்து அமைப்பின் வினோத வாதம்

0

பாபர் மஸ்ஜிதின் அனைத்து பகுதியுமே ராமர்  பிறந்த இடம் என்பதற்கான ஆவணங்கள் 1982ஆம் ஆண்டு நடந்த கொள்ளையில் தொலைந்துவிட்டது என நிர்மோகி அகாரா அமைப்பினுடைய வக்கீல் சுசில் ஜெயின் தெரிவித்துள்ளார்.

“அயோத்தியில் பாபர் மஸ்ஜித் அமைந்துருக்கும் அனைத்து பகுதியும் ராமர்  பிறந்த இடம் என்பது லட்சக்கணக்கான இந்துக்களின்  நம்பிக்கை.  அங்கு இன்னும் சிலைகள் உள்ளது. அங்கு யார் வழிபட்டார்கள் என்பதன் அடிப்படையின் மூலம், அது கோயிலா அல்லது மசூதியா என்பதை முடிவு செய்ய முடியும் “என உச்ச நீதிமன்றத்தில் ராம்லாலா அமைப்பு சார்பில் ஆஜரான வக்கீல் பராசரன் தெரிவித்தார்.

முதல் விசாரணையின்போது நிர்மோகி அகாரா அமைப்பின் சார்பின் ஆஜரான வக்கீல் சுசில் ஜெயின், “சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலமும் தங்கள் அமைப்புக்கு சொந்தமானது என கூறினார்”. அவரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ‘‘சர்ச்சைக்குரிய இடம் உங்களுக்கு சொந்தமானதா என்பதற்கு ஏதாவது வருவாய் ஆவண ஆதாரங்களை வைத்துள்ளீர்களா? அப்படி இருந்தால் அது மிகச் சிறந்த ஆதாரமாக இருக்கும்.  நீங்கள் ஆதாரத்துடன் இந்த இடத்துக்கு வாருங்கள்,’’ என சுசில் ஜெயினிடம் நீதிபதிகள் கூறினர். இதற்கு பதில் அளித்த ஜெயின், ‘‘கடந்த 1982ஆம் ஆண்டு நடந்த கொள்ளையில், ஆவணங்கள் எல்லாம் தொலைந்து விட்டன,’’ என்றார்.

Comments are closed.