பாபரி மஸ்ஜித் ஆர்ப்பாட்டம்: பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் மீது வழக்குப் பதிவு

0

பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றத் தீா்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, சென்னையில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு நடத்திய போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினா் இல்லம் அருகே பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி., தனியரசு எம்.எல்.ஏ., தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன், பச்சைத் தமிழகம் கட்சித் தலைவா் சுப.உதயகுமாரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமுமுக உள்ளிட்ட பலா் இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்று பேசினா்.

இந்தப் போராட்டம் காவல்துறையின் அனுமதியின்றி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அனுமதியின்றி கூடியது, ஆா்ப்பாட்டம் நடத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Comments are closed.