இஸ்லாமியர்களை அவமதித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: வலுக்கும் போராட்டம்!

0

நாங்குநேறி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் இஸ்லாமியர்களை மிரட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இடைத்தேர்தல் பணிக்காக நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் சென்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு களக்காடு ஒன்றியம் கேசவனேரி கிராமத்துக்கான பொறுப்பும் ராஜேந்திர பாலாஜியிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் மனு அளிக்க சென்ற இஸ்லாமியர்களிடம் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாய மக்களையும் அவமதிக்கும் வகையில் அவர் பேசியுள்ளார்.

இதுகுறித்து மனு அளித்தவர்கள் தெரிவிக்கையில், நாங்கள் மன்னு அளிக்க சென்றோம், எங்களைப் பார்த்ததும் காரில் இருந்தபடியே திடீரென ஆத்திரத்துடன் கத்தத் தொடங்கினார். ‘முஸ்லிம்கள் எங்களுக்கு ஓட்டுப்போட மாட்டீங்களே… நாங்க ஏன் உங்களுக்கு உதவி செய்யணும்? யாருக்கு ஓட்டுப் போட்டீங்களோ அவங்கள்ட்டயே மனுவைக் குடுங்க.

பி.ஜே.பி கூட்டணியில் நாங்க இருக்கிறதால தமிழ்நாட்டில் மோடி ஆட்சி செய்யுற மாதிரி நீங்க நினைக்கிறீங்க. இப்படி நீங்க எங்களைப் புறக்கணிச்சா ஜம்மு-காஷ்மீர்ல உங்களை ஒதுக்கி வச்சது மாதிரி இங்கேயும் ஒதுக்கிவைக்க வேண்டியிருக்கும்’’ என்று அவமதித்து பேசினார். மனுவைக் கையால்கூட தொட மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள், அங்கிருந்து வந்துவிட்டோம்’’ என்றனர்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இப்பேச்சை கண்டித்து பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு, ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.

Comments are closed.