CAAக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு!

0

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதையடுத்து பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகாவின் பெங்களுரு உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று கர்நாடக மாநிலம் மங்களுருவில் தடையை மீறி ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக சென்றுள்ளனர்.

அப்போது போராட்டகாரர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளது. பின்னர் காவல்துறை கண்ணீர் புகைகுண்டு வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டினர். இதில் குண்டடிப்பட்டு 23 வயதான நவ்ஷீலா மற்றும் 49 வயதான ஜலீல் என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இதைபோல், உ.பியிலும் காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் முகமது வகீல் என்ற இளைஞர்  உயிரிழந்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.