சட்டத்திருத்த மசோதா: இந்தியாவின் வரலாற்று சிறப்பு வலுவிழந்துவிட்டது- வங்கதேச அமைச்சர்!

0

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பாஜக  பெரும்பான்மையில் இருப்பதால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு அண்டை நாடான பாகிஸ்தான் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது வங்கதேசமும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமென் தெரிவித்துள்ளதாவது, “மத சார்பின்மை மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாக சகிப்புத்தன்மை கொண்ட நாடு என இந்தியாவை வரலாறு போற்றுகிறது. ஆனால் இந்த மசோதாவால் இந்தியாவின் வரலாற்றுச்சிறப்பு வலுவிழந்துவிட்டது.

மத நல்லிணக்கம் சிறப்பான முறையில் கடைபிடிக்கப்படும் சில  நாடுகளில் வங்கதேசமும் ஒன்று. இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வங்கதேசத்தில் வந்து சில மாதங்கள் வாழ்ந்தால், மத நல்லிணக்கத்திற்கு எங்கள் நாடு முன்னுதாரணமாக திகழ்வதை காண்பார்” என்றார் அவர்.

Comments are closed.