ரோஹிங்கிய முஸ்லிம்கள் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூகி பொய் கூறியதாக குற்றச்சாட்டு!

0

2017ஆம் ஆண்டில் மியான்மர் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல்களால் 7 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி ரோஹிங்கிய மக்கள் அகதிகளாக வங்கதேசத்தில் உள்ள முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளை கைவிட்டு, குற்றம் புரிந்தவர்களை தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ரோஹிங்கியர்களுக்கு இழப்பீடும் அளிக்க வேண்டும் என உத்தரவிடுமாறு சர்வதேச நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டிருப்பதாக கேம்பியா நீதித்துறை அமைச்சகம் குற்றியுள்ளது.

இந்நிலையில் நெதர்லாந்து நாட்டிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூகி, ‘பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளின்போது மியான்மா் ராணுவம் அளவுக்கதிகமான தாக்குதல்கள்நடத்திருந்தாலும், அதை வைத்து  “இன அழிப்பு” என கூற முடியாது’ என்று ஆங் சான் சூகி வாக்குமூலம் அளித்தாா்.

இதுகுறித்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கயா அகதிகளுக்கான அமைப்பின் தலைவா் முகமது முஹிபுல்லாஹ், “ரோஹிங்கயாக்கள் இனப் படுகொலை செய்யப்படவில்லை என்று சா்வதேச நீதிமன்றத்திடம் ஆங் சான் சூகி பொய் கூறியிருக்கிறாா்.

மியான்மாரில் சிறுபான்மை ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு அந்த நாட்டு அரசு குடியுரிமை மறுத்து வருகிறது. ரோஹிங்கிய முஸ்லிம்கள் வசிக்கும் ராக்கைன் மாகாணத்தில் ராணுவம், தாக்குதல் நடத்தியதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனா். இந்த வன்முறைக்கு பயந்து 7.4 லட்சம் ரோஹிங்கயாக்கள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனா்.

 

Comments are closed.