“சாவர்க்கருக்கு மட்டுமல்ல, கோட்சேவுக்கும் பாரத ரத்னா விருது கொடுப்பார்கள்”- பாஜகவுக்கு டி.ராஜா கண்டனம்!

0

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வி.டி. சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படும் என பா.ஜ.க வாக்குறுதி அளித்துள்ளது.

பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கைக்கு பல தரப்பினரிடம் இருந்து கண்டனங்களும் எழுந்துள்ளன.

மேலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா அந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

“மகாத்மா காந்தியின் படுகொலைக்கு காரணமான ஒரு குற்றவாளிகளில் ஒருவரான சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க கோருவது என்பது மிகப்பெரிய முரணாகும். இதனை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும்.

பா.ஜ.க சாவர்க்கரை தொடர்ந்து, காந்தியைக் கொன்ற கொலையாளி நாதுராம் கோட்சேவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க அறிவிக்கும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை” என கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் போராட்டத்தின்போது பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து, நாட்டையே காட்டிக் கொடுத்தவர் வி.டி. சாவர்க்கர். இந்து மகா சபையின் தலைவரான அவர், மகாத்மா காந்தி படுகொலை வழக்கில்  குற்றவாளியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.