பெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்

0

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள புலிகேசி நகரைச் சேர்ந்த சீனிவாசமூர்த்தி காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. இவரது உறவினர் நவீன் குமார் என்பவரின் முகநூல் பக்கத்தில் இஸ்லாம் குறித்து அவதூறு பரப்பும் நோக்கில் கருத்து பதிவிட்டுருந்தார்.

பின்னர் தனது முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக நவீன் கூறியிந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த சிலர் கோபமடைந்து எம்.எல்.ஏ வீட்டின் முன்பு திரண்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் கூறிவந்த நிலையில், தீடிரென அங்கிருந்தவர்கள் எம்.எல்.ஏ வீட்டின் முன்பிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். மேலும் கார்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் கலவரக்காட்சியத்தது.

இதனிடையே சாலையோர கடைகள், வாகனத்தை அடித்து நொருக்கி சேதப்படுத்துவதாக தகவல் வெளியானதையடுத்து, புலிகேசி நகரை சேர்ந்த இஸ்லாமியர்கள், அப்பகுதியில் உள்ள இந்து கோவில் ஒன்றை சுற்றி நின்று மனித சங்கிலி அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்களின் இந்த மனித சங்கியை கண்ட கலவரக்காரர்களில் சிலர் அவர்களுடன் உடன் நின்றி இந்து கோவிலை பாதுகாத்தனர். இந்த சம்பவம் போலிஸார் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பெங்களூரு நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.