மக்களவை தேர்தல்: விளம்பரத்திற்கு மட்டும் ரூ.27000 கோடி செலவழித்த பாஜக!

0

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக செய்த செலவுகள் குறித்து ஊடகக் கல்வி மையம் ஒரு கணக்கெடுப்பை எடுத்துள்ளது. இந்த கணக்கெடுப்பு இரண்டாம் கட்ட தகவல்கள், கள ஆய்வு உள்ளிட்ட அம்சங்களின் மூலம் நடைபெற்றுள்ளது. இந்த கணக்கெடுப்பின் முடிவுகளை நேற்று வெளியிட்டுள்ளது.

அந்த முடிவுகளில், ‘இந்த வருடம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக செலவு செய்துள்ளது. அதிலும் இம்முறை விளம்பரங்களுக்கான செலவு மிகவும் அதிகரித்துள்ளது. அது மட்டுமின்றி வாக்காளர்களுக்கும் நேரடியாகப் பணம் அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலில் பாஜக சுமார் ரூ.60000 கோடி செலவழித்துள்ளது. அதில் 45% அதாவது ரூ. 27000 கோடி விளம்பரங்களுக்குச் செலவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1998 ஆம் வருடம் பாஜக விளம்பரங்களுக்கு 20% மட்டுமே செலவழித்துள்ளது. அதைப் போல் 2009 ஆம் வருடம் 40% விளம்பரங்களுக்காகச் செலவு செய்த காங்கிரஸ் இம்முறை 15-20% வரை மட்டுமே செலவு செய்துள்ளது.

மற்றும் வாக்காளர் ரீதியாகக் கணக்கெடுக்கும் போது பாஜக ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ரூ.700 செலவழித்துள்ளது. இதில் ரூ.12000 கோடி முதல் ரு.15000 கோடி வரை வாக்காளர்களுக்கு நேரடியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த தேர்தலில் பணம் பரவலாக செலவழிக்கப்பட்டுள்ளது. இதே ரீதியில் அடுத்த தேர்தலின் போது செலவுகள் ரூ.1 லட்சம் கோடியை எட்ட வாய்ப்புள்ளது.

Leave A Reply