சேலத்தில் ராமர் படங்களுடன் அனுமதியின்றி பேரணி சென்ற பாஜகவினர் கைது

0

சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையானது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில், 1971ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி செவ்வாய்பேட்டையில் திராவிடக் கழக பேரணி நடந்த பகுதியில் பாஜகவினர் ராமர் படங்களுடன் பேரணி செல்ல முயற்சி செய்தனர். பேரணி செல்ல முயன்றவர்களை தடுத்ததால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பேரணி செல்ல முயன்ற பாஜகவினர் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்துத்துவ இயக்கங்கள் ரஜினிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், ரஜினிக்கு பலதரப்பிலிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் அவர் பாஜகவால் பயன்படுத்தப்படும் பொருள் எனவும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.