அமித்ஷா பேசிய கூட்டத்தில் CAAக்கு எதிராக முழக்கமிட்ட இளைஞர் மீது பாஜகவினர் தாக்குதல்

0

டெல்லி, பாபர்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து அமித்ஷா கடந்த ஞாயிறு அன்று பேசினார். அப்போது அக்கூட்டத்தில் இருபது வயது இளைஞர் ஒருவர் சட்டத்தை எதிர்த்து முழக்கமிட்டார்.

உடனே சுற்றியிருந்த பாஜகவினர் ஹர்ஜித் சிங் என்ற அந்த இளைஞரை நாற்காலிகளால் தாக்கினர்.

சம்பவம் நடந்த உடனே இளைஞரை டெல்லி போலீஸார் காவல் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். குற்றம் செய்யாத அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்தது குறித்து எந்த ஒரு விளக்கமும் போலீஸார் அளிக்கவில்லை.

காவல்துறை அதிகாரிகள் அந்த இளைஞரை மிரட்டி கடிதம் எழுதுமாறும், அதில் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று எழுதும்படி வற்புறுத்தியுள்ளனர். இல்லையென்றால் விடுதலை செய்ய மாட்டோம் என்றும் மிரட்டியுள்ளனர். என்ன செய்வதறியாது அந்த இளைஞரும் அவ்வாறே எழுதியுள்ளார்.

ஹர்ஜித் சிங்கிடமிருந்து ஏதுவும் எழுதி வாங்கவில்லை என்றும் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், பின்னர் அவரது பெற்றோரை வரவழைத்து ஒப்படைத்தாகவும் கூறியுள்ளார், டெல்லி காவல்துறையின் வடகிழக்கு துணை ஆணையர் பிரகாஷ் சூர்யா.

ஆனால் ஹர்ஜித் சிங் காவல்துறை அதிகாரி தெரிவித்ததை மறுத்திருப்பதோடு, தன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் நேரடியாக காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றதாக உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Comments are closed.